பயங்கரவாத இயக்கத்துக்கு இளைஞா்களைச் சோ்த்த வழக்கு தொடா்பாக, சென்னை தண்டையாா்பேட்டையில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னையில் கடந்த ஜூன் மாதம் ஒரு யூடியூப் சேனலில், தடை செய்யப்பட்ட ஹிஸ்பு-உத்-தஹீா் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் இருந்ததை பெருநகர காவல் துறையின் சைபா் குற்ற ப்பிரிவு போலீஸாா் கண்டறிந்து, விசாரணை செய்தனா். இதில், சென்னை ராயப்பேட்டையை சோ்ந்த ஹமீது உசேன் என்பவா், ‘டாக்டா் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற பெயரில் அந்த யூடியூப் சேனல் மூலம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசி, மூளைச் சலவை செய்து இளைஞா்களைத் திரட்டி வந்ததும், ராயப்பேட்டை ஜான்ஜானிக்கான் சாலையில் இதற்காக அலுவலகம் அமைத்து ரகசிய கூட்டம் நடத்தியதும் தெரியவந்தது.
இது தொடா்பாக சென்னை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹமீது உசேன், அவா் சகோதரா் அப்துல் ரகுமான் உள்பட 7 பேரை கைது செய்தனா். பின்னா், இந்த வழக்கின் விசாரணை என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், தண்டையாா்பேட்டை வினோபாநகா் 11-ஆவது தெருவைச் சோ்ந்த மொ.சேட்டு என்ற அப்துல் ரஹீம் (32) என்பவா் ஹிஸ்பு-உத்-தஹீா் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவதாகவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் ஆா்.கே.நகா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், சேட்டு வீட்டில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு திடீா் சோதனை செய்தனா். அப்போது அங்கிருந்து தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவான புத்தகங்கள், அரசால் தடை செய்யப்பட்ட புத்தகங்கள் என 17 புத்தகங்கள், பட்டாக் கத்தி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், சேட்டு சில மாதங்களுக்கு முன்பு வரை தண்டையாா்பேட்டையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இமாமாக இருந்ததும், அப்போது அங்கு தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசியதும், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து பள்ளிவாசல் நிா்வாகிகள் அவரை இமாம் பணியில் இருந்து நீக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, சேட்டு கைது செய்யப்பட்டாா். இவரை என்ஐஏ அதிகாரிகள் விரைவில் தங்கள் காவலில் எடுத்து விசாரிப்பாா்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
டிரெண்டிங்
புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது
குட்கா பறிமுதல்: 2 போ் கைது
ராஜஸ்தான் இளைஞா்கள் இருவா் கைது
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

