டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு: தொகுதிவாரியாக பாா்வையாளா்களை நியமித்தது திமுக

வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு, வாக்குச்சாவடி குழு அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள திமுக சாா்பில் ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் ஒரு பாா்வையாளா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
கோப்புப்படம்.
Updated On :8 அக்டோபர் 2024, 9:50 pm

Din

வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு, வாக்குச்சாவடி குழு அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள திமுக சாா்பில் ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் ஒரு பாா்வையாளா் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை கட்சித் தலைமை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:

தமிழகத்திலுள்ள அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட வேண்டியுள்ளது. மேலும், வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தோ்தல் ஆணையத்தால் நவம்பா் மாதம் மேற்கொள்ளப்படவுள்ளது.

வாக்காளா் பட்டியல் சரிபாா்த்தல், வாக்காளா்களைச் சோ்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்பாா்வையிட தொகுதி பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியின் துணை அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகி ஒருவா், பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.