வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

மழை புகார்: சென்னை மாநகராட்சியின் உதவி எண்கள்!

சென்னை மாநகரில் மழை தொடர்பான புகார்களைத் தெரிவிக்க உதவி எண்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

News image
மழை உதவி: சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள வாட்ஸ் ஆப் எண்
Updated On :14 அக்டோபர் 2024, 1:48 pm

DIN

சென்னை மாநகரில் மழை தொடர்பான புகார்களைத் தெரிவிக்க உதவி எண்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மழை தொடர்பான புகார், மீட்புப் பணிகளுக்கு 1913 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

கட்டுப்பாட்டு அறையை 044 - 2561 9204, 2561 9206, 2561 9207 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ் ஆப் எண் - 9445551913. இந்த எண்ணிலும் புகைப்படம், விடியோக்களை அனுப்பி புகார்களைத் தெரிவிக்கலாம்.

இதேபோன்று Chennaicorporation.gov.in இணையதளம், நம்ம சென்னை செயலி வாயிலாகவும் மழை தொடர்பான புகார்களைப் பதிவிடலாம்.

மேலும், சென்னை மாநகராட்சியின் சமூகவலைதள பக்கங்கள் வாயிலாகவும் மழை தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம்.

கனமழை எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று வடதமிழக கடலோர பகுதியை நோக்கி அடுத்த 48 மணிநேரத்தில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (அக். 15) மிக கனமழையும், நாளை மறுநாள் (அக். 16) அதி கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கவுள்ளது. இதனையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

வெள்ள பாதிப்புகள் அதிகம் உள்ள இடங்களைக் கண்டறிந்து மாவட்ட வாரியாக விவரங்களை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.