அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சில மணி நேரங்களில் சீர்செய்யப்பட்ட நடைபாதை!

செய்தி வெளியான சில மணி நேரங்களில் சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடைபாதை சீர்செய்யப்பட்டது குறித்து...
chennai ambattur
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இரண்டாவது பிரதான சாலையில் சீர்செய்யப்பட்ட நடைபாதை.DIN
Published on
Updated on
1 min read

சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடைபாதையில் தோண்டப்பட்ட பள்ளம் பற்றி தினமணி இணையதளத்தில் செய்தி வெளியிட்ட சில மணி நேரங்களில் சரிசெய்யப்பட்டிருக்கிறது.

தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள் என எண்ணற்ற நிறுவனங்கள் செயல்படும் அம்பத்தூர் தொழிற்பேட்டைப் பகுதிக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து கொண்டிருக்கும் சூழலில், பார்வையற்றோர், முதியவர்கள் என பலர் செல்கின்றனர்.

சீர்செய்யப்பட்ட நடைபாதை
சீர்செய்யப்பட்ட நடைபாதை

இந்நிலையில் இரண்டாவது பிரதான சாலையில், ஏதோ வேலை செய்த கேபிள் நிறுவனத்தினர், கற்களை மூடாமல் பள்ளத்தை அப்படியே விட்டுச் சென்றிருந்தனர்.

இந்த சாலையில் உள்ள நடைபாதையில் போடப்பட்டுள்ள கற்கள் இரண்டு நாள்களுக்கு முன்னதாக கேபிள் பதிப்பதற்காக அகற்றப்பட்டன. ஆனால், முறையாக வேலையை முடிக்காமல் கேபிள்கள் வெளியே தெரியும் வகையில், கற்களை மீண்டும் மூடாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளது கேபிள் நிறுவனம்.

முன்னதாக, கற்களை மூடாமல் இருந்தபோது...
முன்னதாக, கற்களை மூடாமல் இருந்தபோது...

தவிர, இதே சாலையின் இதே நடைபாதையில் நெடுகிலும் மழை நீர் வடிவதற்காக உள்ள வடிகால் பள்ளங்களின் மூடிகளும் உருக்குலைந்து, வாய் திறந்து கிடக்கின்றன. சற்று கவனிக்காவிட்டாலும் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் உள்ளே தடுமாறி விழுந்து காயமுற நேரிடலாம். மழை மேலும் தொடரும் நிலையில், இதுபோன்ற பள்ளங்களை மூட வேண்டும் என்று தினமணி இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதையடுத்து சில மணி நேரங்களில் இந்த பள்ளம் மூடப்பட்டு நடைபாதை சீர்செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com