தீபாவளிக்கு சிறப்புப் பேருந்து: அக். 19-ல் அமைச்சர் ஆலோசனை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வருகிற அக். 19 அன்று ஆலோசனை நடத்துகிறார்.
பண்டிகை காலங்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பிற ஊர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்குவது வழக்கம்.
அந்தவகையில், நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக். 31 ஆம் தேதி வருகிறது.
இதையும் படிக்க | மீண்டும் பணிக்கு திரும்பிய சாம்சங் தொழிலாளர்கள்!
இதையொட்டி, தமிழகம் முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 10,500 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக வருகிற அக்.19 ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் அதிகாரப்பூர்வ தகவல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.