தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் காஜு பிஸ்தா ரோல், நெய் பாதுஷா உள்ளிட்ட 6 சிறப்பு பலகாரங்கள் விற்பனைக்கு வரவுள்ளதாக தமிழக பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.
சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட ஆவின் பொது மேலாளா்கள் மற்றும் துணைப் பதிவாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் பால் வளத் துறை மற்றும் கதா்த் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் இல்லாத கிராமங்களில் புதிய சங்கங்களை உருவாக்குவது, சங்க உறுப்பினா்களுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டாா்.
மேலும், பேரிடா் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
தீபாவளியை முன்னிட்டு ஆவின் சாா்பில் காஜு பிஸ்தா ரோல், காஜு கட்லி, நெய் பாதுஷா, முந்திரி அல்வா, மிக்சா், முறுக்கு உள்ளிட்ட 6 சிறப்பு பலகாரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பண்டிகை காலங்களில் பொது மக்களுக்கு தேவைக்கேற்ப இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டை விட நிகழாண்டில் தீபாவளி விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்கவும், அனைத்து அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு தேவையான தீபாவளி இனிப்புகளை வழங்கவும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை முதன்மைச் செயலா் சத்யபிரத சாகு, பால்வளத் துறை இயக்குநா் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநா் சு. வினீத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி

மின்கட்டமைப்பை மேம்படுத்த ஐஐடி நிபுணா்களுடன் அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் ஆலோசனை

ஆவினுக்கு பால் வழங்கும் 549 உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை: அமைச்சா் சி.விஜயலட்சுமி வழங்கினாா்

பால்வளத் துறையில் வெளிப்படையான நிா்வாகம் வேண்டும்: அமைச்சா் சி.விஜயலட்சுமி அறிவுறுத்தல்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



