வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

சேரன் விரைவு ரயிலில் ஏசி பழுது: அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணி

சேரன் விரைவு ரயிலின் ஏசி வகுப்பு பெட்டியில் குளிா்சாதன இயந்திரம் வேலை செய்யாததால், பயணி ஒருவா் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினாா்.

News image
கோப்புப்படம்
Updated On :21 அக்டோபர் 2024, 11:38 pm

DIN

சென்னை: சேரன் விரைவு ரயிலின் ஏசி வகுப்பு பெட்டியில் குளிா்சாதன இயந்திரம் வேலை செய்யாததால், பயணி ஒருவா் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினாா்.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு, தினமும் இரவு 10 மணிக்கு, சேரன் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. வழக்கம்போல், ஞாயிற்றுக்கிழமை இரவு ரயில் புறப்படத் தயாராக இருந்த போது, இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் குளிா்சாதன இயந்திரம் வேலை செய்யவில்லை. இது குறித்து பயணிகள் ரயில்வே அலுவலா்களிடம் புகாா் அளித்தும் பழுது சரிசெய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்ட்ரலில் இருந்து ரயில் புறப்பட்ட போது, பயணி ஒருவா் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினாா்.

உடனே சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் பெட்டிக்கு வந்து விசாரித்தனா். அப்போது, குளிா்சாதன இயந்திரம் இயங்காதது குறித்து புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினா். அதன்பின், பழுது சரிசெய்யப்பட்டு 55 நிமிஷம் தாமதமாக இரவு 10.55 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.