அன்பில் மகேஸுக்கு போலீஸ் காவல் கோரிய மனு! நவ. 2-ல் தீர்ப்பு!வங்கக் கடலில் புதிய புயல்! நவம்பர் முதல் வாரம் எப்படி இருக்கும்? தீபாவளிக்கு மழையா?தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவளித்தால் பெருந்தன்மையுடன் ஏற்பேன்! சீமான்இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? மு.க. ஸ்டாலின் பதில்!பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!ரூ.100 கோடி ஊழல்: அன்பில் மகேஸ் நீதிமன்றத்தில் ஆஜர்முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் மரியாதை!முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! முதல்வர் விஜய்அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் (அக். 30)சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!சொந்த புத்தியும் சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு: மு.க.ஸ்டாலின்

2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம்: தவெக தலைவர் விஜய்!

2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்

Updated On :

2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் வி.சாலை கிராமத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தவெக தலைவர் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது.

உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள். நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.

உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை. அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள்.

உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன். வாருங்கள். மாநாட்டில் கூடுவோம். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம்.

2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.