தவெக மாநாடு: விஜய்க்காக உருவான பாடல் இன்று வெளியீடு!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டையொட்டி அக்கட்சியின் தலைவர் விஜய்க்காக உருவாக்கப்பட்ட சிறப்புப் பாடல் இன்று வெளியாகிறது.
தவெக மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள்
தவெக மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள்படம் | எக்ஸ்
Updated on
1 min read

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டையொட்டி அக்கட்சியின் தலைவர் விஜய்க்காக உருவாக்கப்பட்ட சிறப்புப் பாடல் இன்று (அக். 27) வெளியாகிறது.

'மண்ணை உயர்த்திட.. மக்களை உயர்த்திட.. வந்தார் நேர்மையான தலைவர்' எனத் தொடங்கும் இப்பாடல், தமிழக வெற்றிக்கழக மாநாட்டையொட்டி இன்று வெளியாகிறது.

தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டின் வெற்றித் திலகம் என்ற வரிகளும் பாடலில் இடம்பெற்றுள்ளன.

மாநாடு நிகழ்ச்சி நிரல்

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் இன்று (அக். 27) நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு மேல் மாநாடு தொடங்கவுள்ளது.

மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... 'கண் திறக்கப்பட்ட' நீதிதேவதையும் கடவுள் காட்டிய வழியும்!

முதலில் 100 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சித் தலை வர் விஜய், ரிமோட் மூலம் கட்சிக் கொடியேற்றி, மாநாட்டு மேடையிலிருந்து 600 மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள ரேம்ப் வாக் பகுதியில் நடந்து சென்று தொண்டர்களை நோக்கி கையசைத்த பின்னர், மாநாடு தொடங்கும்.

மாநாட்டின் தொடக்கமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பின்னர், மாநாட்டுக்காக இடம் கொடுத்தவர்கள். உதவியவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

தொடர்ந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளும், நிறைவாக கட்சித் தலைவர் விஜயும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com