
பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களாக கொண்டு செயல்படுவோம் என்று விஜய் பேசியுள்ளார். ஆனால், பெரியாரின் முக்கிய சித்தாந்தமான கடவுள் மறுப்புக் கொள்கையைப் பின்பற்றப் போவதில்லை. கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவர்கள் நாங்களல்ல என்றும் விஜய் பேசியுள்ளார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் இன்று (அக். 27) நடைபெற்றது. மேடை ஏறிய விஜய் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசியதாவது, “வெறுப்பு அரசியலை கையிலெடுக்க போவதில்லை. கொள்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.”
இதையும் படிக்க: ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு! - விஜய்
”அரசியல் வேண்டாம் என நினைத்து வாழ்ந்து வந்த நான், ஒருகட்டத்துக்கு மேல் பணம் சம்பாதித்து என்ன செய்ய போகிறோம் என்று தோன்றியது.
நம்மை வாழ வைத்த மக்களுக்கு என்ன செய்வது என யோசித்தபோது தான்... அரசியல் என்ற எண்ணம் உதித்தது.
அரசியலில் தாக்குப்பிடிக்க முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், பின்விளைவுகளை பற்றிச் சிந்திக்காமல் இறங்கிவிட்டேன் அரசியலில். இனி எதைப் பற்றியும் கவலையில்லை. ஒவ்வொரு நடவடிக்கையும் நிதானமாக யோசித்தபின்பே எடுத்து வைப்போம்.
அரசியலில் என்ன நிலைபாடு என்பது முக்கியம். சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் அரசியலில். எதிரிகள் இல்லாத களம் கிடையாது.”
இதையும் படிக்க: 45 நிமிடங்களுக்குள் உரையை நிறைவு செய்த விஜய்!
”ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தை களைய வேண்டும். 100 சதவிகிதம் ஊழலை ஒழிக்க முடியுமா? எனத் தெரியவில்லை.
பிளவுவாத அரசியல் சக்திகளை எளிதில் கண்டறிந்து விடலாம். பிளவுவாத சக்திகள், ஊழல் கபடதாரிகள் ஆகிய இரண்டு பிரிவினருமே நம் எதிரிகளே!” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.