
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் இன்று (அக். 27) நடைபெறுகிறது.
மேடை ஏறிய தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். மாலை 5.30 மணியளவில் தனது உரையை தொடங்கிய விஜய், மாலை 6.15 மணியளவில் தனது உரையை நிறைவு செய்தார்.
இதையும் படிக்க: கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவர்கள் நாங்களல்ல! - விஜய்
விஜய் பேசியதில் கவனிக்கத்தக்க விஷயமாக, ’அரசியலில் தான் ஒரு சிறுவன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்கள் பாதுகாப்புக்கென தனி இலாகா தொடங்க வேண்டும் என்பதையும், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கட்டாயம் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு! - விஜய்
திராவிட மாடல் என்ற பெயரில் மக்களை சிலர் ஏமாற்றுவதாக ஆளும் திமுக அரசை மறைமுகமாக அவர் கடுமையாக விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாஸிசம் என்ற பெயரைக் குறிப்பிட்டும், பிளவுவாத அரசியல் செய்வோர் எனக் மத்திய பாஜக அரசையும் அவர் விமர்சித்துள்ளார்.
“பிளவுவாத சக்திகள், ஊழல் கபடதாரிகள் ஆகிய இரு பிரிவினருமே நம் எதிரிகளே!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.