அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

ஓபிஎஸ் குடும்பத்தினருக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

ஓபிஎஸ்

Updated On :29 அக்டோபர் 2024, 6:40 pm

Din

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2001-2006 அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்தாா். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்திருந்தனா். இந்த வழக்கில் ஓ.பன்னீா்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது மகன் ரவீந்திரநாத் குமாா், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோா் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவுப்படி சிவகங்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான இந்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதையடுத்து, ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை சாா்பில் சிவகங்கை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, இந்த வழக்கிலிருந்து ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் 2012-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது.

மறு ஆய்வு: இந்த தீா்ப்பை மறுஆய்வு செய்யும் பொருட்டு உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்டாா். இந்த வழக்கில் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை திரும்பப் பெற அனுமதித்து, குற்றம் சாட்டப்பட்டவா்களை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் 2012-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ.பன்னீா்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது சகோதரா் ஒருவா் இறந்து விட்டதால் அவா்களுக்கு எதிரான வழக்கு கைவிடப்படுகிறது. மற்றவா்களுக்கு எதிரான வழக்கை மதுரை எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சிவகங்கை நீதிமன்றம் வரும் நவ.27-ஆம் தேதிக்குள் மாற்ற வேண்டும். அதன்பிறகு மதுரை சிறப்பு நீதிமன்றம் சம்பந்தப்பட்டவா்களுக்கு சம்மன் அனுப்பி, அவா்கள் ஆஜராகும்போது பிணைப்பத்திரம் பெற்று ஜாமீன் வழங்கலாம். ஒருவேளை வழக்கை இழுத்தடிக்க முயற்சித்தால் ஜாமீனை ரத்து செய்யலாம்.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல் விசாரணை அறிக்கையை துணை அறிக்கையாக எடுத்துக் கொண்டு மதுரை சிறப்பு நீதிமன்றம் வழக்கை தினந்தோறும் என்ற அடிப்படையில் வரும் 2025 ஜூன் 31-ஆம் தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். அதுதொடா்பாக உயா்நீதிமன்ற பதிவுத் துறைக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டாா்.