
எந்த பிரச்னையும் இல்லாமல் அரசு விரைவுப் பேருந்துகளில் மக்கள் பயணம் செய்வதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு வருகின்றனர்.
பயணிகள் கூட்ட நெரிசலின்றி செல்வதற்கு வசதிக்காக சென்னையில் இருந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையில், இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல கிளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் மூலம் புறப்பட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்ட அவர், பேருந்தில் ஏறி ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, அரசுப் பேருந்துகளில் கடந்த ஆண்டை விட 40 ஆயிரம் பேர் அதிகமாக முன்பதிவு செய்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு நடப்பாண்டு அரசுப் பேருந்துகளில் 1.50 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எந்த புகாரும் வரவில்லை எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.