
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை கொட்டுத்தீர்த்து வருகிறது.
கடந்த சில நாள்களாக சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்துவந்தது. இந்த நிலையில் நேற்று மாலை சென்னை மற்றும் புறநகரில் ஒரு மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது.
தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், மக்கள் தூணி கடைகளுக்கும், ஊர்களுக்கும் படையெடுத்துவருகின்றனர். இந்தநிலையில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை நகரத்தின் பல பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது.
வெயிலுடன் தொடங்கிய இன்றைய நாள் காலை 10 மணி முதல் சட்டென்று வானிலை மாறி குளிர்ந்த காலநிலை நிலவியது. இதையடுத்து, இன்று காலை தூரலுடன் தொடங்கிய மழை சற்று நேரத்தில் கனமழையாக மாறி பெய்து வருகிறது.
சென்னையில் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்ட நிலையில், கொளத்தூர், பெரம்பூர், மணலி, நெற்குன்றம், அண்ணாநகர், அமைந்தகரை ஆகிய இடங்களில் கனமழை பெய்தது.
இதனிடையே தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.