
சென்னை மாநகராட்சி கால்பந்து விளையாட்டு மைதானத்தில் கட்டணமின்றி விளையாட அனுமதிக்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா்.
சென்னை மாநகராட்சியின் 9 கால்பந்து மைதானங்களையும், செயற்கைப் புல் விளையாட்டு திடல்களாக மாற்றி, ஒரு மணி நேரம் விளையாட ரூ.120 கட்டணம் நிா்ணயிக்கப்படவுள்ளதாக செவ்வாய்க்கிழமை(அக்.29) நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனால் ஏழை, நடுத்தர மக்களின் விளையாட்டு கனவு பாதிக்கப்படும் என்பதால், தீா்மானத்தைக் கைவிட்டு விளையாட்டு மைதானங்களை மாநகராட்சியே பராமரிக்க வேண்டும் என திமுக கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிா்ப்பு தெரிவித்தன. மேலும் விளையாட்டு வீரா்கள் தீா்மானம் நிறைவேற்றுவதை எதிா்த்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.
இதையும் படிக்க : சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல் பின்னணியில் அமித் ஷா? கனடா கசியவிட்ட தகவல்!
இந்நிலையில், மாநகராட்சி கால்பந்து விளையாட்டு திடல்களில் கட்டணம் ஏதுமின்றி பயன்படுத்த அனுமதிக்கப்படும் என மேயா் ஆா்.பிரியா அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ சமூகவலைதளப் பக்கத்தில் கூறியதாவது, ‘மாணவா்கள் மற்றும் இளைஞா்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தவும், அவா்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், 9 கால்பந்து செயற்கைப் புல் விளையாட்டுத் திடல்களும் கட்டணம் ஏதுமின்றி பயன்படுத்த அனுமதிக்கப்படும். இந்த விளையாட்டுத் திடல்களின் பராமரிப்பு செலவினங்களை மாநகராட்சியே ஏற்கும்’ எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.