எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றாா் செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவை திரும்பப் பெறுவதாக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
செந்தில் பாலாஜி (கோப்புப்படம்)
Updated On :4 செப்டம்பர் 2024, 8:41 pm

Din

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவை திரும்பப் பெறுவதாக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் இருந்து  விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை  முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமா்வில் மீண்டும் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பு வழக்குரைஞா் கவுதமன், சாட்சிகளின் விசாரணை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தொடங்கிவிட்டதால் இந்த மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெறுவதாகக் கூறினாா்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற அனுமதித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.