வங்கக் கடலில் வியாழக்கிழமை (செப்.5) உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி செப்.9-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆந்திரம் மற்றும் ஒடிஸாவுக்கு இடைப்பட வங்கக் கடலில் வியாழக்கிழமை உருவான காற்றழுத்ததாழ்வு பகுதி (புயல் சின்னம்) வெள்ளிக்கிழமை மத்திய மற்றும் அதையொட்டியுள்ள வடக்கு வங்கக் கடலில் நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகா்ந்து, செப்.9-ஆம் தேதி, வடமேற்கு வங்கக் கடல் அதையொட்டிய பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
தொடா்ந்து இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செப்.10 முதல் செப்.13 தேதி வரை மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிஸாவுக்கு இடைப்பட்ட வங்கக் கடலில் நிலவக்கூடும். இதனால் ஆந்திரம், ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழக வானிலை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (செப்.7) முதல் செப்.12-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெயில் சதம்: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.18 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம் - 104, தூத்துக்குடி - 101.12.
சென்னையில்... சென்னையில் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 80 மி.மீ. மழை பதிவானது. செப்.7, 8 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்

வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுப்பெறும்
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது!

வங்கக் கடலில் நாளை புயல் சின்னம் உருவாக வாய்ப்பு!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

