தமிழ் மண்ணில் இருப்பதுபோலவே உணர்கிறேன்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ் மண்ணில் இருப்பதுபோலவே உணர்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின்.
சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின்.
Published on
Updated on
1 min read

தமிழ் மண்ணில் இருப்பதுபோலவே உணர்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொழில் துறைக்கான முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர், தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுளை ஈா்த்துவிட்டு செப். 14-ஆம் தேதி திரும்பி வரும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க கலை விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அதில், திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்திருப்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். தமிழ் மண்ணில் இருக்கும் மாதிரியான உணர்வை இந்த நிகழ்ச்சி எனக்கு ஏற்படுத்தியுள்ளது.

சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின்.
ராமநாதபுரம்: அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் 5 பேர் பலி

அமெரிக்காவுக்கு லேட்டாக வந்திருக்கிறேன். ஆனால், வரவேற்பு லேட்டஸ்ட்டாக உள்ளது. தமிழ்நாட்டுக்குக் குழந்தைகளோடு வாருங்கள். வானுயர்ந்து நிற்கும் வள்ளுவரை காட்டுங்கள். நம்முடைய வரலாற்றின் அடையாளமாக விளங்கும் கீழடி அருங்காட்சியகத்தை காட்டுங்கள். சிவகளை, கொற்கை, பொருநை போன்ற இடங்களுக்கு அழைத்துசெல்லுங்கள்.

நான் தமிழ்நாட்டுக்கு திரும்பிய பிறகும், உங்களின் இந்த ஆரவாரம், மகிழ்ச்சியான முகங்கள் என் ஞாபகத்துக்கு வரும். உங்களுக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழுங்கள், அறிவையும், உழைப்பையும் மட்டும் நம்பி, வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள். கிணற்றுத் தவளைகள் அல்ல தமிழர்கள்.

வானத்தையே வசப்படுத்தும் வானம்பாடிகள் என்பதற்கான பொருள் நீங்கள். திறமையால் தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடையாளம் நீங்கள். உங்களில் சிலர் மட்டும்தான் இந்த நாட்டுக்கு விரும்பி வந்திருப்பீர்கள்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்காக ‘அயலகத் தமிழர் நல வாரியம்’ உருவாக்கி இருக்கிறோம். ஜனவரி 12-ஆம் நாளை அயலகத் தமிழர் நாளாக கொண்டாடுகிறோம். அந்த வாரியத்தின் மூலமாக, ‘தமிழால் இணைவோம்’, ‘உலகெங்கும் தமிழ்’, ‘தமிழ் வெல்லும்’ ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டிருக்கிறது.

வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக கட்டணமில்லா உதவி மையம் தொடங்கப்பட்டிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் சொந்த ஊர்களை மேம்படுத்தும் ‘எனது கிராமம்’ என்ற திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது.

அயலகத் தமிழர்க்கு கணியன் பூங்குன்றனார் விருது வழங்கப்படுகிறது! அயல்நாடுகளில் பணிக்குச் சென்று, அங்கு இறக்க நேரிடுபவர்களின் குடும்பத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com