
திமுக பவள விழா ஆண்டின் சிறப்பாக நிகழாண்டு முதல் முதல்வர் ’மு.க.ஸ்டாலின்’ பெயரில் விருது வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், திராவிட முன்னேற்றக் கழகம் தனது 75ஆண்டு பவளவிழாவைக் கொண்டாடும் சிறப்புமிகு காலத்தில், கழகத்தை ஆறாவது முறையாக ஆட்சியில் அமரவைத்து - இந்தியாவே போற்றிவரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திவரும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரிலான பெருமைமிகு விருதை, இந்த ஆண்டு முதல் வழங்குவதில் தலைமைக் கழகம் பெருமை அடைகிறது.
இந்த ஆண்டுக்கான "மு.க.ஸ்டாலின் விருது" தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.