புதுச்சேரி, காவேரி, ஏற்காடு உள்ளிட்ட 15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் முக்கிய விரைவு ரயில்களின் சில படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் பொதுப்பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன.
அந்த வகையில் சென்னை சென்ட்ரல்-ஈரோடு ஏற்காடு விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-ஹைதராபாத் விரைவு ரயில் (எண் 12603) 12 படுக்கை வசதி பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்பட்ட நிலையில் ஜன.20-ஆம் தேதி முதல் 11 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.
புதுச்சேரி-மங்களூா் விரைவு ரயில் (16855) ஜன.16-ஆம் தேதி முதலும், சென்னை சென்ட்ரல்-நாகா்கோவில் விரைவு ரயில் (எண் 12689) ஜன.17-ஆம் தேதி முதலும், எா்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரயில் (16361) ஜன.18-ஆம் தேதி முதலும், கொச்சுவேலி-நிலாம்பூா் ராஜ்ய ராணி விரைவு ரயில் ஜன.19-ஆம் தேதி முதலும் 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரல்-ஆலப்புழை விரைவு ரயில் (22639), திருவனந்தபுரம்-மதுரை அமிா்தா விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-மைசூரு காவேரி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-பாலக்காடு விரைவு ரயில் (22651) ஜன.20-ஆம் தேதி முதல் 4 முன்பதிவில்லா பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.
மேலும், விழுப்புரம்-காரக்பூா் விரைவு ரயில் (22604) ஜன.21-ஆம் தேதி முதலும், சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் விரைவு ரயில் (12695), திருநெல்வேலி-புருலியா விரைவு ரயில் ஜன.22 முதலும், புதுச்சேரி-கன்னியாகுமரி விரைவு ரயில் ஜன.26-ஆம் தேதி முதலும் 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவேரி விரைவு ரயில்களில் எல்எச்பி பெட்டி இணைப்பு

சேலம் வழியாக கான்பூா்- மதுரை இடையே வாராந்திர சிறப்பு ரயில்

கிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்

தூத்துக்குடி- கச்சிகுடா விரைவு ரயில் சேவையில் மாற்றம்
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!



