திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஓணம், தீபாவளி! 8 சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே!

விழாக்கால சிறப்பு ரயில்கள் குறித்த தெற்கு ரயில்வேவின் அறிவிப்பு பற்றி...

News image

சிறப்பு ரயில்கள் இயக்கம் - கோப்புப்படம்

Updated On :11 செப்டம்பர் 2024, 4:41 pm IST

ஓணம் மற்றும் தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு 8 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே புதன்கிழமை அறிவித்துள்ளது.

ஓணம் சிறப்பு ரயில்கள்

ரயில் எண். 07119 - செகந்திராபாத்தில் இருந்து செப். 13(வெள்ளி) மாலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில், குண்டூர், காட்பாடி, சேலம், கோவை, கோட்டயம் வழியாக கொல்லத்துக்கு மறுநாள் இரவு 11.20-க்கு சென்றடையும்.

அதேபோல், மறுவழித்தடத்தில் ரயில் எண். 07120 - கொல்லத்தில் இருந்து செப். 15 (ஞாயிறு) அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் ரயில், அதே வழியாக திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

ரயில் எண். 07333 - ஹூப்ளியில் இருந்து செப். 13 காலை 6.55 மணிக்கு புறப்படும் ரயில், அர்சிகெரே, பங்காரப்பேட்டை, சேலம், கோவை, கோட்டயம் வழியாக கொச்சுவேலிக்கு மறுநாள் காலை 6.45 மணிக்கு சென்றடையும்.

அதேபோல், மறுவழித்தடத்தில் ரயில் எண். 07334 கொச்சுவேலியில் இருந்து செப். 14 பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு அதே வழியாக ஹூப்ளியை மறுநாள் 12.50-க்கு சென்றடையும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

தீபாவளி, ஆயுதப் பூஜை சிறப்பு ரயில்கள்

ரயில் எண். 06071 - கொச்சுவேலியில் இருந்து நிஜாமுதினுக்கு செப். 20, 27, அக். 4, 11, 18, 25, நவ. 1, 8, 15, 22, 29 தேதிகளில்(வெள்ளி) பகல் 2.15 மணிக்கு புறப்படும் ரயில், கோட்டயம், கோவை, காட்பாடி, விஜயவாடா, நாக்பூர், குவாலியர் வழியாக நிஜாமுதினுக்கு ஞாயிறுதோறும் இரவு 8.40 மணிக்கு சென்றடையும்.

அதேபோல், மறுவழித்தடத்தில் ரயில் எண். 06072 - நிஜாமுதினில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை பகல் 12.53 மணிக்கு சென்றடையும்.

ரயில் எண். 06077 - சென்னை சென்ட்ரலில் இருந்து செப். 21, 28, அக். 5, 12, 19, 24, நவ. 2, 9, 16, 23, 30 தேதிகளில்(சனிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, விஜயவாடா, புவனேஷ்வர், பாலசோர் வழியாக சந்திராகாஜிக்கு திங்கள்கிழமை காலை 7.15 மணிக்கு சென்றடையும்.

அதேபோல், மறுவழித்தத்தில் ரயில் எண். 06073 - சந்திராகாஜியில் இருந்து திங்கள்கிழமைகளில் காலை 10 மணிக்கு புறப்பட்டு, அதே வழித்தடத்தில் செவ்வாய்க்கிழமை பகல் 3.30 மணிக்கு சென்றடையும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரயில்களுக்கான முன்பதிவு நாளை(செப்.12) காலை 8 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.