கடற்கரை மின்சார ரயில் சேவையில் மாற்றம்
சென்னை கடற்கரை ரயில்வே பணிமனையில் பராமரிப்பு நடைபெறவுள்ளதால் செப்.13, 16 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்


சென்னை கடற்கரை ரயில்வே பணிமனையில் பராமரிப்பு நடைபெறவுள்ளதால் செப்.13, 16 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 8.25, 8.55, 10.20 மணிக்கும், திருவள்ளூருக்கு இரவு 7.50 மணிக்கும், கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.45 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் வெள்ளி மற்றும் திங்கள்கிழமை (செப்.13, 16) ரத்து செய்யப்படும். கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் சனி மற்றும் செவ்வாய்க்கிழமை (செப்.14, 17) தேதிகளில் ரத்து செய்யப்படும்.
மறுமாா்க்கமாக திருவள்ளூரில் இருந்து இரவு 9.35 மணிக்கும், கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 9.55 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில் செப்.13, 16 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.
மேலும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூருக்கு இரவு 8.05 மணிக்கு மேல் புறப்படும் ரயில்கள் அனைத்தும் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும். அதுபோல் கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 10.10, 10.40, 11.15 மணிக்கு வரும் ரயில்கள் எழும்பூருடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...