பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் கவனத்தை ஈர்த்துள்ள விஜய்யின் பதிவு!

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்: கவனத்தை ஈர்த்துள்ள விஜய்யின் பதிவு!
பெரியாருடன்  அண்ணா
பெரியாருடன் அண்ணா
Published on
Updated on
1 min read

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் இன்று(செப். 15) கொண்டாடப்படுகிறது. பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அண்ணாவை நினைவுகூர்ந்து வாழ்த்தியுள்ளனர்.

அந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகம்(தவெக) கட்சித் தலைவரும் நடிகருமான விஜய் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதில், நம் மாநிலத்துக்கு தமிழ்நாடு என்ற பெயர் வர அண்ணா எடுத்த நடவடிக்கைகள், சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியது, தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை அமல்படுத்தியது ஆகியவற்றை நினைவுகூர்ந்து குறிப்பிட்டு அண்ணாவை போற்றியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அரசியல் வரலாற்றில் வரலாறு படைத்தவர் ‘அண்ணா’ எனப் புகழாரம் சூட்டியுள்ளார் விஜய்.

ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் விஜய் தன் இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com