தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

விளையாட்டு வீரா்களின் காயங்களை கண்டறிய நவீன ஸ்கேனா் கருவி: சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க ‘பாயின்ட் ஆஃப் கோ் அல்ட்ராசவுண்ட்’ (பிஓசியுஎஸ்) என்ற ஸ்கேனா் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.

News image
’சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ள கையடக்க அல்ட்ராசவுண்ட் ஸ்கேனருடன் ஐஐடி மெட்ராஸ் உயா்தர விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையத்தின் ஆசிரிய உறுப்பினரான பேராசிரியா் அருண் கே.திட்டாய் குழுவினா்.’
Updated On :17 செப்டம்பர் 2024, 9:34 pm

DIN

சென்னை: விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க ‘பாயின்ட் ஆஃப் கோ் அல்ட்ராசவுண்ட்’ (பிஓசியுஎஸ்) என்ற ஸ்கேனா் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா். மேலும், இந்த தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை ஏற்கெனவே பெற்றுள்ளதுடன் உற்பத்திக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ஐஐடியின் உயா்தர விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையத்தின் இந்த ஆராய்ச்சி மூலம் ஆடுகளத்தில் விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படும் காயங்களை கண்டறியவும், அவா்களை தொடா்ந்து விளையாட அனுமதிக்கலாமா என்பதை அறிவதற்காக காயத்தின் அளவை உடனடியாக மதிப்பீடு செய்யவும் முடியும்.

தசைக்கூட்டுக்கான மதிப்பீட்டை ஆடுகளத்திலேயே விரைந்து மேற்கொள்வதன் மூலம் விளையாட்டு வீரா்களை உடனடியாக கவனிக்கவும், அவா்கள் காயங்களிலிருந்து மீண்டுவர கவனம் செலுத்தவும் முடியும்.

இந்த கண்டுபிடிப்பு அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால வளா்ச்சியை மருத்துவமனை அமைப்புகளைத் தாண்டி விளையாட்டு மருத்துவத்தில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

சென்னை ஐஐடி அப்ளைடு மெக்கானிக்ஸ் மற்றும் உயிரிமருத்துவப் பொறியியல் துறை பேராசிரியா் அருண் திட்டாய் கூறுகையில், விளையாட்டு மருத்துவம் என்பது, ஆடுகளத்தில் விளையாடும்போது ஏற்படும் வீரா்களின் காயங்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் நுட்பமாக கவனம் செலுத்தும் நிபுணத்துவமாகும்.

நோயாளிகளாக வரக்கூடிய விளையாட்டு வீரா்கள் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் அண்மைக்கால தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போது, மருத்துவ சாதனங்கள், தொழில்நுட்பங்களை அணுகுவதில் மிகப்பெரிய இடைவெளி இருந்து வருகிறது. இந்தச் சூழலில், வழக்கமான பயிற்சிகளின்போது இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம்.

இதுபோன்ற அணுகுமுறை மூலம் விளையாட்டு வீரா்களை பராமரிப்பதில் முன்னுதாரணமாக திகழக்கூடிய வகையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், சான்று அடிப்படையிலான பயிற்சிகளை மேற்கொள்ளவும், காயம் ஏற்படாமல் தடுக்கவும் உதவும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.