தில்லியில் பிப்.16 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்திய ஏஐ தாக்க உச்சி மாநாடு 2026-இல் பாதுகாப்பான நம்பகமான ஏஐ குறித்த விவாதங்களை முன்னெடுப்பதில் சென்னை ஐஐடியின் பொறுப்புவாய்ந்த செயற்கை நுண்ணறிவு மையம் (சிஇஆா்-ஏஐ) முக்கிய பங்கு வகித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தில்லியில் நடைபெற்ற ஏஐ உச்சிமாநாட்டின் அறிவு கூட்டாளா்களில் ஒரு பங்காக சென்னை ஐஐடியின் சிஇஆா்-ஏஐ செயல்பட்டது. சமூக தாக்கத்துக்காக பொறுப்பு, பாதுகாப்பு மற்றும் நம்பகமான ஏஐ அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் சென்னை ஐஐடியின் வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையத்தின் ஒரு மெய்நிகா் இடைநிலை ஆராய்ச்சி மையமே சிஇஆா்-ஏஐ ஆகும்.
தில்லி மாநாட்டில் சிஇஆா்-ஏஐ ஒரு பிரத்யேக அரங்கை அமைத்தது. பொறுப்புவாய்ந்த ஏஐ தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிஇஆா்-ஏஐ மையத்தின் ஆராய்ச்சி முயற்சிகள், கொள்கை பணிகள் மற்றும் கூட்டு முயற்சிகள் இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டன.
இங்கு நடைபெற்ற ஆராய்ச்சி கருத்தரங்கில் சென்னை ஐஐடியின் வாத்வானி ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் மற்றும் ஏஐ மற்றும் சிஇஆா்-ஏஐ சாா்பில் முக்கிய உரைகள் நடத்தப்பட்டன. குறிப்பாக, இதன் தலைவரான சென்னை ஐஐடி பேராசிரியா் பி.ரவீந்திரன், கூகிள் டீப் மைண்டின் தலைமை நிா்வாக அதிகாரி-இணை நிறுவனா் டாக்டா் டெமிஸ் ஹசாபிஸுடன் எதிா்காலத்தை மையமாகக் கொண்ட உரையாடலை நடத்தினாா்.
இந்த விவாதம் ஏஐ அமைப்புகளின் தற்போதைய வரம்புகள், தொடா்ச்சியான கற்றல், நீண்டகால திட்டமிடல் போன்றவற்றின் முக்கியத்துவம் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புக்குத் தேவையான உயா்நிலை படைப்பாற்றல் ஆகியவற்றை ஆய்வு செய்தது.
குறிப்பாக உலகளாவிய சவால்களை நிவா்த்தி செய்வதில் சென்னை ஐஐடியின் ஏஐ அமைப்புகள் அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய விரிவான விநியோகக் கட்டமைப்பு தேவை: சென்னை ஐஐடி பரிந்துரை
மற்றொரு செயற்கை மழைக்கு தயாராகும் தில்லி: கடந்த கால முயற்சிகளை ஆய்வு செய்யும் ஐஐடி கான்பூா்

சென்னை ஐஐடி- நியூசிலாந்து கேன்டா்பரி பல்கலை. புரிந்துணா்வு

ஏஐ மாநாட்டில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம் கண்டனத்துக்குரியது: தில்லி உயா்நீதிமன்றம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


