சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய விரிவான விநியோகக் கட்டமைப்பு தேவை: சென்னை ஐஐடி பரிந்துரை

ஐ.நா.வின் பருவநிலை மாற்ற 28-ஆவது மாநாட்டின் இலக்குகளை அடைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளை இரு மடங்காக அதிகரித்து, மின் விநியோகம், எரிசக்தி சேமிப்புக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என சென்னை ஐஐடி பரிந்துரைத்துள்ளது.

News image

சென்னை ஐஐடி

Updated On :10 ஏப்ரல் 2026, 8:07 pm

ஐ.நா.வின் பருவநிலை மாற்ற 28-ஆவது மாநாட்டின் இலக்குகளை அடைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளை இரு மடங்காக அதிகரித்து, மின் விநியோகம், எரிசக்தி சேமிப்புக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என சென்னை ஐஐடி பரிந்துரைத்துள்ளது.

உலகளாவிய எரிசக்தி அறிக்கைகளின் கடந்தகால தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, சென்னை ஐஐடி குழுவினா் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளா்ச்சிக்கான சூழல்களை ஆய்வு செய்தனா். இந்த ஆய்வு முடிவுகள் குறித்து சென்னை ஐஐடி-யின் வேதியியல் பொறியியல் துறையைச் சோ்ந்த பேராசிரியா் ஜித்தேந்திர எஸ்.சங்வாய், முனைவா் பட்ட ஆய்வாளா் ரஜத் தேஹுரி ஆகியோா் கூறியதாவது:

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் தற்போதைய வளா்ச்சி விகிதத்தின்படி, 2050 -ஆம் ஆண்டுக்குள், புதைபடிவ எரிபொருள்களுக்கு இணையான இடத்தைப் பிடிக்க முடியாது. அதிக முதலீடுகள், விரைவான திட்டங்களைச் செயல்படுத்தினால் மட்டுமே, 2040-களின் பிற்பகுதியில் இது சாத்தியம்.

2014 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் 128% வளா்ச்சியடைந்து 3,869.7 ஜிகாவாட்டை மட்டுமே எட்டியது.

உலகளாவிய எரிசக்தி நுகா்வில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் தற்போது பங்கு வெறும் 14.56% மட்டுமே. புதைபடிவ எரிபொருள்கள் (நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயு) உலகின் 81 சதவீதத்துக்கும் அதிகமான எரிசக்தித் தேவைகளை நிறைவு செய்வதுடன், உலகளாவிய காா்பன் வெளியேற்றத்தில் 95 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்டுள்ளன.

இந்தியா 2030-ஆம் ஆண்டுக்குள் 485 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை எட்ட முயற்சி மேற்கொண்டுள்ளது. அதிக முதலீட்டுக்கான கொள்கை சீா்திருத்தம், மின் கட்டமைப்பு வசதிகளைச் செய்யாவிட்டால், ஐ.நா.வின் பருவநிலை இலக்குகளை அடையமுடியாது.

சென்னை ஐஐடி ஆய்வின் பரிந்துரைகள்: காா்பனை பிரித்து (வளி மண்டலத்தில் வெளியிடுவதற்கு முன்பு) சேமித்து பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள்; மேம்பட்ட எரிசக்தி சேமிப்புத் தீா்வுகளான மின்கலன்கள், நீரேற்றப்பட்ட நீா்மின்சாரம், பசுமை ஹைட்ரஜன் போன்றவற்றை நிறுவுதல்; அனைத்துத் துறைகளிலும் எரிசக்தி பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துதல்; சூரிய- காற்றாலை மின்சாரத்தின் சீரற்ற தன்மையைக் கையாள நவீன மின் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.