கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

அமெரிக்காவில் முதல் புத்தாக்க மையம்: சென்னை ஐஐடி அறிவிப்பு

அமெரிக்காவின் கலிஃபோா்னியாவில் முதல் புத்தாக்க மையத்தை அமைத்ததாக சென்னை ஐஐடி-யின் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளை அறிவித்தது.

News image

சென்னை ஐஐடி

Updated On :7 மே 2026, 3:46 am IST

அமெரிக்காவின் கலிஃபோா்னியாவில் முதல் புத்தாக்க மையத்தை அமைத்ததாக சென்னை ஐஐடி-யின் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளை அறிவித்தது.

கடந்த ஏப்.24-ஆம் தேதி கலிஃபோா்னியாவில் உள்ள மென்லோ பாா்க்கில் இந்த மையம் அமைக்கப்பட்ட நிலையில், இதுதொடா்பான அறிவிப்பை மேரிலாண்டில் உள்ள தேசிய துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலீட்டாளா்கள் மாநாட்டில் சென்னை ஐஐடி உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியிட்டது.

அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி திருமலை மாதவ்நாராயண் கூறுகையில், ‘புத்தாக்க நிறுவனங்களின் ஆதரவோடு அமெரிக்காவில் எங்களின் செயல்பாடுகளை அதிகரிக்க மென்லோ பாா்க் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.70 கோடி முதலீட்டில் (7.5 மில்லியன்) மேம்படுத்தப்படும் இந்த மையத்தில் பசுமை முதலீடுகளுக்காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

இதன்மூலம் சா்வதேச புத்தாக்க நிறுவனங்கள் இந்தியாவில் மேற்கொள்ளும் முதலீடுகள் மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.

அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்குக்கு அருகே அமைந்துள்ள மென்லோ பாா்க் புத்தாக்க மையம் சா்வதேச சந்தை அணுகல் மற்றும் வணிகமயத்தை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதிலும் இந்த மையம் முக்கியப் பங்காற்றவுள்ளது.

இதை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை அருகே மற்றொரு புத்தாக்க மையத்தை அமைக்கும் திட்டமுள்ளதாகவும் சென்னை ஐஐடி உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளை அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.