சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
நிரந்தர நீதிபதிகளாக 5 பேரை நியமிக்க கொலீஜியம் அண்மையில் பரிந்துரைத்திருந்ததை ஏற்று குடியரசுத் தலைவர் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி சென்னை உயா்நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் நீதிபதிகள் விக்டோரியா கெளரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆா்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்துக்கு நீதிபதி விக்டோரியா கெளரி உள்பட 5 நிரந்தர நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் செவ்வாய்க்கிழமை பரிந்துரை செய்திருந்தது.
அந்தப் பரிந்துரைக்கு தமிழக ஆளுநரும், முதல்வரும் ஒப்புதல் அளித்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.