வார இறுதியில் சந்திக்க திட்டமிட்டிருந்த நண்பர்கள் மீது வாகனம் மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
திருவண்ணாமலையில் ஆரணி - ஆற்காடு புறவழிச்சாலையில் 3 பேர் ஒன்றாக பயணித்த இருசக்கர வாகனத்தின்மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பைக்கில் பயணித்த மூவரும் ஞாயிற்றுக்கிழமையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து, அங்கிருந்த சிலர், காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்த மூவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்த விசாரணையின் அடிப்படையில் தெரிவிப்பதாவது, இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் சரண்ராஜ் (21), ராஜேஷ் (19), மணிகண்டன் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் சரண்ராஜும் ராஜேஷும் முள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள்; சரண்ராஜின் கல்லூரி காலத்து நண்பரான மணிகண்டன் என்பவர் ஆரணி நகருக்கு அரியாபாடி கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.
இவர்களில் சரண்ராஜ், ஒரு தனியார் நிதி நிறுவனத்திலும், ராஜேஷ் ஒரு தனியார் நகைக் கடையிலும் பணிபுரிந்து வந்துள்ளனர். மேலும், மணிகண்டன் வேலை தேடிக்கொண்டு இருந்துள்ளார்.
இந்த நிலையில்தான், மூவரும் ஆரணி அருகே சந்திக்கத் திட்டமிட்டிருந்தனர். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம், இவர்கள் மூவரும் சென்ற பைக்கின்மீது மோதியுள்ளது. வாகனம் மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி திமுக நிா்வாகி உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |

மு.க.ஸ்டாலின் வழியில் முதல்வர் விஜய் | Sumathi Megavarnam | CM Vijay | MK Stalin | TVK | DMK |BJP



