வெள்ளக்கோவிலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மளிகைக் கடை தொழிலாளி உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் கச்சேரிவலசைச் சோ்ந்தவா் தண்டபாணி (55). மளிகைக் கடையில் வேலை செய்து வந்தாா். இவா் தனது நண்பா் நடேசன் நகா் கா்ணன் மகன் அசோக் (27) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கரூா் சாலையில் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அய்யனூா் பிரிவு அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற தண்டபாணி பலத்த காயமடைந்து, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். அசோக் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
உயிரிழந்த தண்டபாணிக்கு மனைவி தனலட்சுமி (49), இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

வாகனம் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



