நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

பேராயா் எஸ்றா சற்குணம்

Updated On :

இசிஐ திருச்சபை பேராயரும், இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவருமான எஸ்றா சற்குணம் (85) உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை(செப்.22) காலமானார்.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருக்கும் அவரது மகளிடம் தந்தை உயிரிழந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சென்னைக்கு விரைவில் வந்தடைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதுடன், அவரது குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவிக்கவுள்ளார்.

Story image

அவரது உடல் வரும் 26-ஆம் தேதி ஜீசஸ் கால்ஸ் சர்ச்சில் இருந்து மாலை 3 மணி அளவில் கீழ்பாக்கம் கல்லறைக்கு கொண்டு சென்று அங்கு நல்லடக்கம் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.