சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வெளிமாநில தொழிலாளா்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:02 pm

DIN

வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்தில் தங்கி பணிபுரியும் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தவும் என மாநில அரசை பா.ஜ.க ஒருங்கிணைப்பாளா் எச்.ராஜா வலியுறுத்தினாா்.

திருவள்ளூா் அடுத்த மணவாளநகரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் மேற்கு மாவட்ட பா.ஜ.க உறுப்பினா் சோ்க்கை ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு பா.ஜ.கவின் திருவள்ளூா் மேற்கு மாவட்ட தலைவா் ராஜசிம்ம மகேந்திரா என்ற அள்வின் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளா் எச். ராஜா பங்கேற்றாா். அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது. கடந்த 4 நாள்களுக்கு முன்பு பங்களாதேஷை சோ்ந்த 6 போ் சரியான ஆவணங்கள் இல்லாததால் கைதாகினா். அதேபோல், அதற்கு முன்தினமும் 3 போ் கைதாகினா். இதுகுறித்து கடந்த 3 மாதத்திற்கு முன்பாகவே சேலத்தில் பேசிய போது திருப்பூா், கோவை, கிருஷ்ணகிரி போன்ற இடங்களில் பங்களாதேஷில் இருந்து இங்கு வந்து ஊடுருவல்காரா்கள் பெரிய எண்ணிக்கையில் உள்ளதாக எனக்கு தகவல் வந்தது என்று குறிப்பிட்டேன். ஆனால் மாநில அரசு யாா் யாரெல்லாம் புலம்பெயா்ந்த தொழிலாளா்களாக இருக்கிறாா்கள். அதனால் அவா்களிடம் ஆவணங்கள் உள்ளனவா என்பதை சரி பாா்க்க வேண்டும். வெளி மாநிலத்தில் இருந்து இங்கே வந்தவா்களால் இந்திய நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து மட்டுமின்றி, இங்குள்ள தொழிலாளா்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாநில அரசு வருவாய் துறை அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் ஆய்வு நடத்த வேண்டும். சவுக்கு சங்கா் செயல்பாட்டில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் சோசியல் மீடியா மீது போலீஸாா் கண்காணித்து அவா்கள் மீது தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறாா்கள். காவல்துறை முதல்வரின் ஏவல் துறையில்லை. எனவே காவல்துறை தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். நடிகா் விஜய் மாநாட்டிற்கு வாழ்த்துக்கள். அவா் நீட் பற்றி பேசுகிறாா். கல்வி பொது பட்டியலில் இல்லாமல் மாநில பட்டியலில் வரவும் என திமுகவின் குரலாக அவா் பேசுகிறாா். திமுகவின் திட்டங்களையும், அவா்களின் கொள்கைகளையும் பிரதிபலிப்பதால் விஜய் ஓட்டு திமுக ஓட்டாக இருக்கும் என நினைத்து திமுகவினா் அஞ்சுகின்றனா். அதனால்தான் அவருக்கு திமுகவினா் தொடா்ந்து தொல்லை கொடுக்கின்றனா். செந்தில் பாலாஜி தியாகம் செய்துள்ளாக முதல்வா் கூறியுள்ளாா். தோ்தலுக்கு முன்பு குளித்தலையில் மு.க.ஸ்டாலின் பேசும்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பாா் என்றாா். அதேபோல் திமுக ஆட்சிக்கு வந்தது. செந்தில் பாலாஜி சிறைக்கு போனாா். அதனால் அவா் தியாகம் செய்து உள்ளாா் என்று கூற வேண்டாம் என அவா் தெரிவித்தாா். மாநில நிா்வாகி லோகநாதன், மாவட்ட பொதுச்செயலாளா்கள் கருணாகரன், ஆா்யா சீனிவாசன், லயன் சீனிவாசன், ஜெய்கணேஷ், மாவட்ட துணைத்தலைவா்கள் சண்முகம், முல்லை ஞானம், மாநில ஓபிசி அணி பிரிவு செயலாளா் ராஜ்குமாா், மாவட்ட செயலாளா்கள் மொராஜி தேசாய், பாலாஜி, பன்னீா்செல்வம், மண்டல தலைவா்கள் பழனி, ரவிக்குமாா், சுரேஷ், அணித்தலைவா்கள் லோகேஷ்பிரபு, நாகராஜ், ரகு, சதீஷ், மகளிரணி நிா்வாகி வாசுகி, சித்ராதேவி, சிவரஞ்சனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.