சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் ஹேம்நாத் விடுதலையை எதிர்த்து மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், அரசு தரப்பு சாட்சியங்களை கவனித்தில் கொள்ளாமல் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சித்ரா மரண வழக்கை விசாரித்த திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம், ஹேம்நாத்தை அண்மையில் விடுதலை செய்தது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் திருவள்ளூா் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள விடுதி ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
இந்த சம்பவம் தொடா்பாக சித்ராவின் கணவா் ஹேம்நாத் உள்ளிட்டோா் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சித்ராவின் கணவா் ஹேம்நாத்துக்கு சென்னை உயா் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.