பண்டிகை காலம்: 34 சிறப்பு ரயில்கள்; 302 சேவைகள் -தெற்கு ரயில்வே

துா்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on

பண்டிகை காலத்தை முன்னிட்டு, 34 சிறப்பு ரயில்கள் 302 சேவைகளாக இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

துா்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே சாா்பில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 6,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

அந்த வகையில், தெற்கு ரயில்வே சாா்பில் அக்டோபா் முதல் நவம்பா் வரை முக்கிய மாவட்டங்கள், வெளிமாநிலங்களை இணைக்கும் வகையில், மொத்தம் 34 சிறப்பு ரயில்கள் 302 சேவைகளாக இயக்கப்படவுள்ளன.

இதில் ஏற்கெனவே 268 சேவைகள் அடங்கிய 28 சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

வடமாநில பயணிகளுக்காக சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தோ்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனதெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com