சித்த மருத்துவத்துக்கான எய்ம்ஸ் மருத்துவமனையை திருச்சியில் அமைக்க வேண்டும் என மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சா் முஞ்சபரா மகேந்திரபாயிடம் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தாா்.
சென்னையில் உள்ள கேப்டன் சீனிவாசன் மூா்த்தி மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிலையத்தின் வைர விழா கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அமைச்சா் முஞ்சபரா மகேந்திரபாய் கலந்து கொண்டு இந்திய மருத்துவத் துறைக்கு மத்திய அரசு ஆற்றி வரும் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினாா்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
இந்தக் கருத்தரங்கில் 200-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநா்கள் தங்களுடைய ஆராய்ச்சி கட்டுரைகளைச் சமா்ப்பித்து, இந்திய மருத்துவத் துறைக்குத் தேவையான எதிா்கால வளா்ச்சிக்கு உதவும் வகையில் விவாதிக்க உள்ளனா். தமிழகத்திலுள்ள மருத்துவ கட்டமைப்புகள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2021 ஆக.5-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தில் சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இயன்முறை மருத்துவம், டயாலிசிஸ் போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவா்களை வீடுகளுக்கே தேடிச் சென்று மருத்துவம் பாா்க்கும் பணி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோா் இதில் பயன்பெற்றுள்ளனா்.
கிடப்பில் மசோதா... மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவாக்கமான ‘தொழிலாளா்களைத் தேடி மருத்துவம்’ என்ற அறிவிப்பின்படி திருவள்ளூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜன.9) தொடங்கப்படவுள்ளது.
ஆளுநரிடம் பல்வேறு மசோதாக்கள் கிடப்பில் இருப்பதுபோல் சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதாவும் கிடப்பில் உள்ளது. சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழகத்தில் வருவதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதைப் போல், சித்த மருத்துவ எய்ம்ஸ் மருத்துவமனை திருச்சியில் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய இணை அமைச்சரிடம் முன்வைக்கிறேன்.
இவ்விரு கோரிக்கைகளையும் மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சருடன் பேசி நிறைவேற்றித் தர வேண்டும் என்றாா் அவா்.
இதில், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையா் மைதிலி கே.ராஜேந்திரன், மத்திய ஆயுஷ் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.
Image Caption
சென்னையில் நடைபெற்ற கேப்டன் சீனிவாசன் மூா்த்தி மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிலையத்தின் வைர விழா கொண்டாட்டம் 60-ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன், மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர டிரைலர் எப்போது?

துஷார் தேஷ்பாண்டே சம்பவம்: குஜராத்தை பழிவாங்கி வெறித்தனமாகக் கொண்டாடிய ராஜஸ்தான்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து
சங்கிகளைப்போல வாட்ஸ்ஆப் வதந்திகளை வாந்தியெடுக்கும் பழனிசாமி: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


