மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஐஐடி-சென்னையில் 720 ஆன்லைன் படிப்புகள்

ஐஐடி-சென்னை கல்வி மையத்தில், மாணவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு காத்திருக்கிறது. இங்கு வழங்கப்படும் 720 ஆன்லைன் சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :19 ஜனவரி 2024, 10:20 am

சென்னை: ஐஐடி-சென்னை கல்வி மையத்தில், மாணவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு காத்திருக்கிறது. இங்கு வழங்கப்படும் 720 ஆன்லைன் சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2024ஆம் ஆண்டு ஜனவரி - ஏப்ரல் கல்விப் பருவங்களுக்கான சேர்க்கை தொடங்கியிருக்கிறது.

கல்வி அமைச்சகத்தின் முன்முயற்சியான தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட கற்றலுக்கான தேசிய திட்டத்தின்  (என்.பி.டி.இ.எல்.) கீழ் 720 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்து பயனடையலாம்.

பொறியியல், அறிவியல், மனிதவளம் மற்றும் மேலாண்மைத் துறைகளில் 720க்கும் மேற்பட்ட படிப்புகளுடன், இந்த செமஸ்டரில் 30 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு மேம்பட்ட கற்றல் வாய்ப்புகள் வழங்குவதை என்பிடிஇஎல் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் http://nptel.ac.in/ அல்லது சுவயம் http://swayam.gov.in/ என்று அறிவிக்கப்பட்டுள்ள இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்வதற்கான கடைசி தேதி பிப்ரவரி 19 ஆகும்.

முன்பதிவு இலவசம் என்றாலும், படிப்பை மேற்கொள்பவர்கள் ரூ.1,000 செலுத்தி விரும்பும் சான்றிதழ் படிப்புகளில் பங்கேற்கலாம். இதுவரை 2.5 கோடிக்கும் அதிகமானோர் என்பிடிஇஎல் படிப்புகளில் படித்து பயனடைந்துள்ளனர்.

இந்த செமஸ்டரில் திட்டமிடல் மற்றும் கட்டடக்கலை ஆய்வுகளுக்கான ஆராய்ச்சி முறை, கணக்கீட்டு மரபியல், கட்டமைப்பு அதிர்வுநிலை, பயன்பாட்டு புள்ளியியல் வெப்ப இயக்கவியல், விளையாட்டுகள் மற்றும் தகவல் மற்றும் பரிசோதனை ரோபாட்டிக்ஸ் போன்றவை புதிய பாடத்திட்டங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.