தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நிர்மலா சீதாராமன் புகார்: அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

அறநிலையத்துறை கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்ய எந்த தடையும் இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு விளக்கமளித்துள்ளா

கோப்புப் படம்.

Published On :

அறநிலையத்துறை கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்ய எந்த தடையும் இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு விளக்கமளித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. 
 தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.
 முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஜன.22 அயோத்தி கோயில் நேரலையை ஒளிபரப்ப தமிழக அரசு தடைவிதித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியிருந்தார். 
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஜன.22 அயோத்தி கோயில் நேரலையை ஒளிபரப்ப தமிழக அரசு  தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.  அறநிலையத்துறையின் கீழுள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை நடத்த நாளை அனுமதிக்கப்படவில்லை. தனியாருக்கு சொந்தமான கோயில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் காவல்துறையினர் தடுத்து வருகின்றனர். 
பந்தல்களை அகற்றுவோம் என ஏற்பாட்டாளர்களை காவல்துறை மிரட்டுகிறது. இந்து விரோத, வெறுப்பு நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கோயில்களில் நாளை ராமர் பெயரில் பூஜை நடத்த தடை என்ற தகவலுக்கு இந்து சமய அறிநிலையத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அன்னதானம் உள்ளிட்ட வழக்கமான நிகழ்வுகளுக்கு கோயில்களில் நாளை கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.