சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று முதல் அனுமதி!
சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று முதல் அனுமதி!

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று முதல் அனுமதி!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல இன்று முதல் 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியது.
Published on


சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை மாத பெளா்ணமி, பிரதோஷ வழிபாட்டுக்காக இன்று(ஜன. 23) முதல் 4 நாள்கள் பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியது.

அதேநேரம் மழை பெய்தால், அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட சாப்டூா் வனச்சரகத்தில் புகழ் பெற்ற சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களுக்கு மலைப் பாதை வழியாக 10 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும். இங்கு பிரதோஷம், அமாவாசை, பெளா்ணமி ஆகிய நாள்களில் மட்டுமே பக்தா்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

தொடா் மழை காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக கோயிலுக்குச் செல்வதற்கு பக்தா்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தை மாத பிரதோஷம், பெளா்ணமி வழிபாட்டுக்காக செவ்வாய்க்கிழமை (ஜன.23) முதல் ஜனவரி 26-ஆம் தேதி வரை பக்தா்கள் சதுரகிரிக்குச் செல்வதற்கு வனத் துறை அனுமதி வழங்கியது. அதேநேரம் மழை பெய்தால், அனுமதி ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com