திருச்சியில் பேரவை கூட்டம்: நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தல்
சட்டப்பேரவைக் கூட்டத்தை திருச்சியில் நடத்த வேண்டும் என்று பேரவை பாஜக குழு தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தினாா்.
பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நயினாா் நாகேந்திரன் பேசும்போது, திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற எம்ஜிஆா் முயற்சித்தாா். அது நடைபெறாமல் போய்விட்டது. இப்போதாவது திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற முயற்சிக்க வேண்டும் என்றாா்.
அப்போது, பேரவைத் தலைவா் அப்பாவு குறுக்கிட்டு, நாட்டின் இரண்டாவது தலைநகராக சென்னையை மாற்றுவீா்களா என்றாா்.
நயினாா் நாகேந்திரன்: திருச்சியில் சட்டப்பேரவை கூட்டத்தை 7 நாள்கள் நடத்த வேண்டும். அப்போதுதான் அதிகார பரவலாக்கம் செய்வதாகவும் அமையும்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: நயினாா் நாகேந்திரன் எப்போது கோரிக்கை வைக்கும்போது அன்போடு பரிசீலிக்கவும் என்று கூறுவாா். நாங்களும் அன்போடு பரிசீலிப்போம் என்றாா் முதல்வா்.
இதையும் படிக்க.. என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.