ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வக்ஃப் மசோதாவை தமிழக பாஜக வரவேற்கிறது! - அண்ணாமலை

வக்ஃப் மசோதாவை தமிழக பாஜக வரவேற்கிறது! - அண்ணாமலை

News image
பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை - (கோப்புப்படம்)
Updated On :4 ஏப்ரல் 2025, 9:45 am

DIN

வக்ஃப் மசோதாவை தமிழக பாஜக வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று (மார்ச் 3) அதிகாலை வக்ஃப் திருத்த மசோதா 2024 நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அதற்கு இந்தியா கூட்டணி எம்பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் பேசுகையில், “நாடாளுமன்றத்தில் ஒரு சரித்திரம் நிகழ்ந்திருக்கிறது. மக்களவை மற்றும் மாநிலங்களைவையில் தனிப்பெரும்பான்மையுடன் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்கு 1 கோடிக்கும் அதிகமானோரிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பாஜக வரவேற்பு அளிக்கிறது.

சில அரசியல் கட்சிகள் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதனால், இந்தச் சட்டத்தைப் பற்றி எடுத்துரைக்க வேண்டியது எங்களது கடமையாக இருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்னர் தன்னுடைய சொத்தை இஸ்லாமியர் ஒருவர் தனது சொத்துகளை நன்கொடையாக அறக்கட்டளைக்கு அளிக்கக்கூடியதான் வக்ஃப். அதனால்தான், மத்திய, மாநில அரசுகள் இதில் தலையிடுகின்றனர்.

1913 ஆம் ஆண்டு இதனை நடைமுறைப்படுத்த பிரிட்டிஷ் அரசு முஸல்மான் என்ற சட்டத்தை கொண்டுவந்தனர். 1954 ஆம் ஆண்டு முறையான வக்ஃப் சட்டத்திருத்தம் கொண்டு வந்து ஒவ்வொரு மாநிலத்திலும் வக்ஃப் வாரியம் கொண்டு வரப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சி முடிவடையும் தருவாயில் 2013 ஆம் ஆண்டு கொண்டுவந்த சில மாற்றங்களுடன் தற்போது வக்ஃப் மசோதா-2025 நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சியினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் எனத் தெரியவில்லை.

வக்ஃப் வாரியத்தின் கீழ் 39 லட்சம் ஏக்கர் நிலம் இருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் 21 லட்சம் ஏக்கர் நிலம் அதிகரித்திருக்கிறது. திருச்செந்தூர் முழுவதுமே வக்ஃப் வாரியத்தின் கீழ் இருக்கிறது. வக்ஃப் சொத்து யாருடையது என்பதை அதன் உரிமையாளர்தான் கூறமுடியும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.