பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றம்!

தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து கேசவ விநாயகம் நீக்கப்பட்டுள்ளது குறித்து..
கேசவ விநாயகம்
கேசவ விநாயகம்கோப்புப் படம்
Updated on
1 min read

தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து கேசவ விநாயகத்துக்கு வேறு பதவி வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை தரப்பில் இருந்து புகார் கூறப்பட்டு வந்த நிலையில் பாஜக பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலாளராக கேசவ விநாயகம் பொறுப்பு வகித்து வந்தார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பொறுப்பில் இருந்துவந்த நிலையில், தற்போது அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழக பாஜக முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை தரப்புக்கும் கேசவ விநாயகம் தரப்புக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. விரைவில் பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் பொறுப்பில் வேறு நபர் நியமிக்கப்படவுள்ளார்.

Summary

BJP organizational general secretary Kesava Vinayagam transferred

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com