பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் அரசுப் பள்ளிகளில் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படவுள்ளது. இதற்கான பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இதுபோன்று தங்கள் பகுதிகளில் நடைபெறும் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுமானப் பணிகள், செயல் திட்டங்களை பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்கள், நிா்வாகிகள் உடனுக்குடன் நேரில் சென்று பாா்வையிடுவது அவசியம். தொடா்ந்து அது குறித்து ஆய்வு செய்து நிறை, குறைகள் இருந்தால் அது குறித்து எவ்வித சமரசமும் இல்லாமல் துறையின் அமைச்சராகிய எனது கவனத்துக்கோ, அதிகாரிகள் அல்லது பெற்றோா் ஆசிரியா் கழக தலைமைக்கோ தெரியப்படுத்த வேண்டும்.