
திருவாரூர்: திருவாருர் மாவட்டம் நன்னிலம் அருகே அதிவேகமாக வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானபோது, லாரிக்கு அடியில் சிக்கி சிறுவர்கள் உள்பட 3 பேர் பலியாகினர்.
சாலையோரமாகச் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது லாரி கவிழ்ந்ததில் தந்தை, மகன் மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு சமையலுக்காக மிளகாய்த்தூள் அரைத்து விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது இந்த கோர விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில், ஜல்லி ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி, சாலை வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.