நிதி நிறுவனங்களில் மோசடி தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சமீப காலமாக நிதி நிறுவனங்களில் பெயர்களில் மோசடி அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பது மற்றும் மோசடியில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிஜிபி, ஏடிஜிபி, உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.