ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாஜக மாநில தலைவர் பதவி: விருப்பமனு தாக்கல் செய்தார் நயினார் நாகேந்திரன்!

பாஜக மாநில தலைவர் பதவிக்கு விருப்பமனு தாக்கல் செய்தார் நயினார் நாகேந்திரன்!

News image

வேட்பு மனு

Updated On :11 ஏப்ரல் 2025, 9:27 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிட நயினார் நாகேந்திரன் விருப்பமனு தாக்கல் செய்தார். அவரது பெயரை, மூத்த தலைவர்கள் முன்மொழிந்தனர்.

பாஜக மாநிலத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, மாநில தேர்தல் பொறுப்பாளர் சக்கரவர்த்தியிடம் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் விருப்பமனுவை தாக்கல் செய்த நிலையில், அவருடன், பாஜகவின் மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா, அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

அதுபோல, நயினார் நாகேந்திரன் விருப்ப மனுவை, அண்ணாமலை, எல். முருகன், வானதி ஸ்ரீனிவாசன் உள்பட 10 தலைவர்கள் முன்மொழிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுபோல, மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்வார் என்றும் அவர் ஒருமனதாக பாஜக மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு நாளை பதவியேற்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, வேட்புமனு தாக்கல் 2 மணிக்கு மேல் தொடங்கியநிலையில், ஒரு சில மணி நேரத்துக்கு முன்பே பாஜக அலுவலகமான கமலாலயம் வந்த நயினார் நாகேந்திரன், அலுவலக வாயிலைத் தொட்டுக்கும்பிட்டுவிட்டு உள்ளே சென்றபோதே, அவர்தான் புதிய தலைவர் என்று சூசகமாகப் புரிந்துகொள்ள முடிந்ததாக அங்கிருந்த பாஜக தொண்டர்கள் கூறியுள்ளனர்.

மேலும், பாஜக அலுவலகத்துக்குள் வந்த நயினார் நாகேந்திரனுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல், பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்ட பேனரிலும் நயினார் நாகேந்திரன் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.

பாஜக தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வெள்ளிக்கிழமை விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நயினார் நாகேந்திரன் விருப்பமனு தாக்கல் செய்திருக்கிறார். இவர் மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்வார் என்றும், வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யாமல், ஒருமனதாக அவர் தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, புதிய தலைவர் போட்டியில், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டவர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்த நிலையில், பாஜக தலைவர்களுடன் பேசி, அமித் ஷா, புதிய தலைவரை ஒருமனதாகத்தேர்வு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருக்கலாம். அதன்படியே, அமித் ஷா பேசி, தலைவர் போட்டியில் இருந்தவர்களே, நயினார் நாகேந்திரன் பெயரை முன்மொழிய ஒப்புதல் அளித்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.