
சென்னை: பாஜகவில் தமிழ்நாட்டின் மாநிலத் தலைவர் பதவி வகித்துவந்த அண்ணாமலைக்கு இப்போது புதியதொரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து பாஜகவில் ஐக்கியமான நடிகர் சரத்குமாரும் தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், எல். முருகன், எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா, ஏஜி சம்பத், பால் கனகராஜ், வினோத் பி. செல்வம் ஆகியோரும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று(ஏப். 12) சென்னை, வானகரத்தில் உள்ளதொரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி விழாவில், பாஜக மாநிலத் தலைவராகப் போட்டியின்றி தேர்வாகியுள்ள நயினார் நாகேந்திரனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு, அவர் அதிகாரபூர்வமாக கட்சி தலைவராகப் பதவியேற்றுக்கொண்டார்.
அப்போது நயினார் நாகேந்திரனைப் புகழ்ந்து பேசிய அண்ணாமலை, அவருக்கு இனிப்பு ஊட்டியும் அவரை கட்டியணைத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதைப் பார்க்க முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.