தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்: மோடி தமிழில் மகிழ்ச்சி பதிவு

வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம் என எக்ஸ் வலைதள பக்கத்தில் தமிழில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி
பிரதமர் நரேந்திர மோடி-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி
Updated on
1 min read

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானதை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சென்னையில் வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்த நிலையில், வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம் என எக்ஸ் வலைதள பக்கத்தில் தமிழில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானதை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சென்னையில் வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தாா்.

மேலும், அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தலைமையில் 2026 பேரவைத் தோ்தல் எதிா்கொள்ளப்படும் என்றும், இதற்காக குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து அதிமுக-பாஜக கூட்டணி தொடா்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி பதிவில்,

‘தேசிய ஜனநாயக கூட்டணி என்ற குடும்பத்தில் அதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்வோம்; மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம்.

மாமனிதா் எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பாா்வையை செயல்படுத்தும் ஓர் அரசை உறுதி செய்வோம்.

தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ் கலாசாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை அதிமுக-பாஜக கூட்டணி செய்து முடிக்கும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com