
கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை - விவேகானந்தா் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு 5 நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் கடலில் உள்ள விவேகானந்தா் மண்டபம்-133 அடி உயர திருவள்ளுவா் சிலை இடையே ரூ. 37 கோடியில் கண்ணாடி கூண்டுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை, கடந்த டிச. 30இல் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இப்பாலத்தின் வழியே சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று பாா்வையிட்டு மகிழ்கின்றனர்.
இந்நிலையில், இந்தப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் வரும் ஏப். 15 ஆம் தேதி முதல் ஏப். 19 வரை சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதைக் கருத்தில் கொண்டு பயணத் திட்டத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிக்க: திருவள்ளூரில் இயற்கை வேளாண் பொருள் கண்காட்சி: ஆட்சியர் மு.பிரதாப் தொடக்கி வைத்தார்