
பாஜக கூட்டணி அமைந்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக நான் சொல்லவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் பதவியை விட்டு விலகுவதாக திருமாவளவன் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார்.
இது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான செய்தி. எந்த நேரத்திலும் நான் அப்படி சொல்லவில்லை.
நான் பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றது கிடையாது. என்னை அடையாளம் காட்டியது அதிமுகவும், ஜெயலலிதாவும்தான்.
அதிமுகதான் உயிர் மூச்சு. உயிர் மூச்சு இருக்கும் வரை அதிமுகவில் மட்டும் பயணிப்பேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.