மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

காசம்பட்டி பல்லுயிர் தளம் அறிவிப்புக்கு எதிராக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

காசம்பட்டி பல்லுயிர் தளம் அறிவிப்புக்கு எதிரான போராட்டம் தொடர்பாக...

தமிழர் தேசம் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

Published On :

நத்தம் அருகே தமிழக அரசின் இரண்டாவது பாரம்பரிய பல்லுயிர் தலமாக காசம்பட்டி பகுதி அறிவிப்பை ரத்து செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டி பகுதியில் உள்ள வீரக்கோயில் பகுதியில் உள்ள 4.97 ஹெக்டேர் பரப்பளவை தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் இரண்டாவது பாரம்பரிய பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் தலமாக அறிவித்து அரசாணை வெளியிட்டது.

Story image

இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாங்கள் 800 வருடமாக பாதுகாத்து வரும் வீரகோவில் பகுதியை பொதுமக்களே பாதுகாத்துக் கொள்கின்றோம் எனவும் அரசின் இந்த உத்தரவு தங்களைக்கு தேவையில்லை எனவும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், நத்தம் பேருந்து நிலையம் முன்பு இன்று(ஏப். 15) தமிழர் தேசம் கட்சி சார்பில் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து அரசின் பாரம்பரிய பல்லுயிர் பாதுகாப்பு தலம் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், ஊர் மக்களிடம் கருத்துகளைக் கேட்காமல் அறிவிப்பு செய்தது ஏன் எனக் கூறி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Story image

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காசம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் வாகனங்கள் மூலம் கலந்து கொண்டனர்.

தமிழர் தேசம் கட்சியின் தலைவர் கே. கே. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த திட்டத்தை அரசு கைவிடவில்லை என்றால் அடுத்தகட்டமாக இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை செய்தனர்.

Story image

ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசம் கட்சி தலைவர் செல்வகுமார் பேசுகையில், ”காசம்பட்டி மக்கள் கோயிலைப் பாதுகாக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்ட வனத்துறை அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டு உள்ளது. அடுத்து அவரது அமைச்சர் பதவியும் போகப் போகின்றது” என விமர்சனம் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.